தர்மபுரி அருகே சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை

May 15, 2024 - 06:00
 0  9
தர்மபுரி அருகே சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(24).லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கதிரவன் (22). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த 35 வயது பெண்ணுடன் அரிகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. கணவனை இழந்த அந்த பெண் தனது 2 மகள்களுடன் தனியாக வசிக்கிறார். இதற்கிடையே அந்த பெண்ணின் 15வயதான மூத்த மகளுக்கும், கதிரவனுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு அரிகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கதிரவனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர் பொருட்படுத்தவில்லை.இந்நிலையில் அரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு மறைந்திருந்து கண்காணித்துள்ளார். நள்ளிரவில் கதிரவன் வீட்டை விட்டு வெளியே சென்றதை கண்டு பின்தொடர்ந்தார். நேற்று அதிகாலையில் வழக்கமாக காதலியை சந்திக்கும் இடத்திற்கு சென்று காத்திருந்தபோது, அரிகிருஷ்ணன் வந்து அவரை பிடித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது, கதிரவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரிகிருஷ்ணன் வயிற்றில் குத்தினார். இதில், அவர் படுகாயமடைந்தார்.ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையிலும், வயிற்றில் இருந்த கத்தியை பிடுங்கி பதிலுக்கு கதிரவன் கழுத்தில் அரிகிருஷ்ணன் வெட்டியுள்ளார். இதில், அவரும் படுகாயமடைந்து சரிந்தார். சத்தம் கேட்டு அப்பகுதியினர் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று பிற்பகல் அரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். கழுத்து நரம்பு துண்டான நிலையில் கதிரவன் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow