மரியண்ணன் வரலாறு

Jul 28, 2024 - 05:40
Jul 27, 2024 - 05:59
 0  5

1. மத்திய அரசு மேடைக்குழு தலைவரும், தி போலீஸ் டிவி.நெட் நிறுவனருமான மரியண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

தருமபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லில் மைக்கேல் சாமி ஆனந்தி என்னும் தம்பதியற்கு 1989 செப்டம்பர் 18 அன்று மகனாக பிறந்தவர் மரியண்ணன்.இவருடைய அக்கா லூர்துமேரி.இவர் வறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்தவர். இன்று வரையிலும் இவருக்கு சொந்த வீடு கிடையாது வாடகை வீடுதான்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது சைக்கிள் ஓட்ட ஆசை கொண்டார் போதிய பொருளாதார வசதி இல்லாததால் அவர் தந்தை சைக்கிள் வாங்கித்தர மறுத்தார். ஆனால் படிப்பிலும் ஒரு விஷயத்தை கற்பதிலும் சிறந்தவர்.சிறந்த சமூக சிந்தனையாளர் ஐந்தாம் வகுப்பு பயிலும் போது 100 திருக்குறளை ஒரே ஒரு எழுத்துப்பிழை கூட இன்றி எழுதியதை பாராட்டி ஆசிரியர் உனக்கு பிடித்தது என்ன என கேட்க இவர் எனக்கு சைக்கிள் என கூற ஆசிரியரும் அவரது விருப்பத்திற்கு ஏற்றவாரு சிறிய சைக்கிள் ஒன்றினை பெற்றுத் தந்தார்.சைக்கிள் கிடைத்த சந்தோஷம் ஒரு புறம் இருக்க அச்சைக்கிளால் அக்காவிற்கும் தம்பிக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் அதிகரித்தது. சரி ஒரு நாள் நீ ஒரு நாள் நான் என பிரித்துக் கொண்டனர். சண்டைகள் இருந்தாலும் அக்கா மீது தனி பாசமும் அவருக்கு இருந்தது.இவர் ஏழாம் வகுப்பினை தொடர்ந்த போது அக்கா சேலம் ஓமலூர் பகுதியில் உள்ள பாத்திமா என்னும் கிறிஸ்துவ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊரான ஒகேனக்கல்லிற்கு வந்த போது திடீரென மாலை 5 மணிக்கு காணாமல் போன அக்கா இரவு 7 மணியளவிலும் வீடு திரும்பவில்லை. அங்கும் இங்குமாக தேடி அலைந்து கொண்டு இருக்க இரவு 10 மணிக்கு மயங்கி விழும் நிலையில் வீடு திரும்பினார். இவ்வளவு நேரம் எங்கு சென்றாய் என ஆதங்கத்தில் அடிக்கத்தொடங்கிய பெற்றோர் இருதிக்கட்டமாக அக்கம் பக்கத்தினரின் அறிவுரையை கேட்டு அக்காவிடம் பொறுமையாக விசாரிக்க இங்கு படித்து வந்தபோது அதே ஊரைச்சேர்ந்த ஒருவரை விரும்பியதாகவும் நாம் சேர்ந்து வாழ பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் எனவும் இருவரும் விஷம் அருந்திவிட்டதாக கூறியதை தொடர்ந்து அக்காலத்தில் போதிய பேருந்து வசதி இல்லாத

காரணத்தால் 20 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை தாண்டி அக்காவின் சிகிச்சைக்கு மருத்துவமனை கொண்டு செல்ல வழியின்றி அக்காவின் உயிர் மறைந்தது. தந்தையோ கிறிஸ்துவ வன்னியர் வழக்குப்பதிவு பிரேத பரிசோதனை என்று எடுத்து வந்தால் கல்லரையில் இடம் கிடையாது என கிறிஸ்தவர்கள் கூற அக்காவின் உயிர்பலி நீதியின்றி மண்ணோடு மண்ணாக மறைந்தது. அப்போது மரியண்ணன் ஏழாம் வகுப்பு பயிலும் விவரம் இல்லா சிறுவன்.நமது ஏழ்மை பற்றியும்,அக்காவின் மறைவு குறித்த சோகமும் குடும்பத்தை வாட்டி எடுக்க ஏழாம் வகுப்பில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு அதே பகுதியில் ஹோட்டலில் வேலை செய்ய தொடங்கினார். அந்த ஹோட்டல் அதிபர் சொந்தமாக லாரி வைத்திருந்ததால் அவ்வயதிலேயே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாகராஜ் என்னும் ஓட்டுநர் மூலம் லாரி ஓட்ட கற்றார்.ஒவ்வொரு தொழிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென என்னிய இவருக்கு பொதுமக்கள் இடையிலும்,பெற்றோர் இடையிலும் கிடைத்த பெயர் "இவன் எந்த வேலைக்கும் உகந்தவன் அல்ல என்பது".ஒவ்வொரு நாளும் இதனை கேட்டு கேட்டு மனமுடைந்த இவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள எண்ணி பல வழிகளில் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் உயிர் பிரியவில்லை. பிறகு பல வகையில் தற்கொலைக்கு முயன்றும் சாவு அவர் அருகில் செல்ல பயம் கொண்டது. அப்போது தான் ஒன்றை புரிந்துகொண்டார் நாம் ஏதோ ஒரு வகையில் சாதிக்க பிறந்தவன் என்று.பின்பு அனைவருக்கும் கல்வித்திட்டம் என்னும் திட்டத்தின் மூலமாக அதே பகுதியில் உள்ள உழைக்கும் சிறார் சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில் படிப்பு, செயல்திறன்,கைவினை பொருட்கள் தயார் செய்வது போன்றவற்றை பள்ளியில் கற்றுத்தர அதனை கற்பதிலும் மற்ற மாணவர்களை விட முதலிடம் வகித்தார்.அதனை தொடர்ந்து நடனம்,பலகுரலில் பேசுவது, மாயாஜாலம் போன்றவற்றை தொலைக்காட்சிகளிலும் மேடை கலைஞர்கள் வாயிலாக கண்டு ஆர்வம் கொண்ட இவர்.நம்மாள் முடியாதா என அவ்வப்போது பயிற்சி எடுக்கத் தொடங்கி அதிலும் வெற்றி பெற்றார். பின்பு மேடை நடனம், பல குரலில் பேசுவது, மேடை மற்றும் பள்ளிகளில் மாயாஜாலம் செய்வது என அனைத்திலும் ஒகேனக்கல்லில் தனியிடம் பிடித்தார். 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினாலும் கல்வித்திறன், பொதுவான திறமைகள் என பலவற்றிலும் பட்டப்படிப்பினை மிஞ்சினார்.அதே சமயம் அக்காவின் நினைவு பெற்றோர் இடையே வரக்கூடாது என்பதால் வாசலில் கோலமிடுவது,பூ கட்டுவது போன்றவற்றை ஊர்மக்கள் கண்களுக்கு முன்பும் பெற்றோர் முன்னிலையிலும் நிகழ்த்தி அக்கா இறப்பின் குறையை மறைத்த இவருக்கு நம்மைப்போன்ற ஏழ்மையான குடும்பங்களுக்கு எங்கும் நீதி கிடைக்காத காரணம் என்ன என்பதை ஒவ்வொரு நொடியும் சிந்திக்க தொடங்கினார். ஒரு கால கட்டத்தில் எல்லாவற்றிற்கும் நாமே காரணம் என்பதை முழுமையாக அறிந்தார்.அதன் பிறகு நாம் தவறு செய்தால் நம்மை தண்டிக்கவும் கண்டிக்கவும் நமது பெற்றோர் இருக்கின்றனர்.அதே போல் ஒவ்வொரு துறையிலும் நிகழும் தவறுகளை தட்டிக்கேட்டவும், தண்டிக்கவும் பல துறைகள் உள்ளன என்பதை புரிந்து கொண்ட இவர் அதனை ஒவ்வொரு மனிதரிடையிலும் கொண்டு சேர்க்க விரும்பி மக்களுக்கு எடுத்துறைத்தார்.தேசிய மனித உரிமை அணையத்தில் இணைய வழியில் உறுதிமொழி எடுத்து உறுப்பினர் சான்றிதழ் பெற்ற இவர் ஆங்காங்கே நீதி கிடைக்கவில்லை, நியாயம் கிடைக்கவில்லை என்று கவலையில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு மேடை என்னும் வாட்சப் குழு ஒன்றை துவங்கி தேடிச்சென்று உதவ தொடங்கினார் .எங்கள் ஊருக்கு பேருந்து வசதியில்லை, குடிநீர் வசதியில்லை, சாலை வசதியில்லை என பலமுறை மனு அளித்தும் கூட எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வில்லை என்று புலம்பும் பொது மக்களின் குறைகளை இந்திய பிரதமரின் கண்பார்வைக்கும்,இந்திய குடியரசு தலைவர் கண்பார்வைக்கும் எடுத்து சென்று அவரவர் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடங்கினார். அதன் பிறகு 6 வருட போராட்டம் ஆனால் இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை,10 வருட போராட்டம் என பல குறைகளும், கோரிக்கைகளும் இவரை தேடி வர இதற்காகவே ஒரு வாட்சப் குழுவை அமைத்து 2018 முதல் தனது சேவைகளை செய்ய தொடங்கினார்.இவருக்கு ஆள் பலம்,அரசியல் பலம்,பண பலம் போன்றவைகள் எதுவுமே கிடையாது.மக்களுக்குண்டான சில தீராத பிரச்சனைகளுக்காக இருந்த இடத்தில் இருந்தே உதவிகளை செய்ய தொடங்கினார்.ஒரு சில விஷங்களில் இவர் செய்த உதவிகளுக்கு எதிர் தரப்பில் இவருக்கு சூட்டப்பட்ட பெயர் "கெட்டவன்" தேசியமனித உரிமை ஆணையத்தில் சில மாவட்ட நண்பர்களை இணையக்கோரியும், இணைவதால் நமக்குண்டான உரிமைகளை நாமே கேட்கலாம் என்றும் அனைத்து சமூக சேவைகளையும் செய்யத்தொடங்கினார்.இன்று எல்லா இடங்களிலும் இவரை வீழ்த்த சதி திட்டங்களும் நடந்து வருகின்றன. நாம் வாழும் போது முன் விட்டு பின் நம்மை பேசுபவர்கள் இருந்தாலும் நாம் இறந்த பிறகும் பிரச்சனைகள் வரும் வேலையில் இவர் இருந்திருந்தால் இத்தகைய அலட்சிய தவறுகளையும்,குற்றங்களையும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பார் எனவும் இவரைப்போன்ற நபரின் உதவி இனி நமக்கு கிடைக்குமா என கருதும் சிலரும் இம்மண்ணில் வாழ்வர் அத்தகைய மனிதர்களுக்காக வாழ்வது மட்டுமல்ல வீழ்வது கூட பெருமைதான் என வெற்றிப்பயணத்தை தொடர்ந்து வரும் சமூக போராளி இவர்.இவரது செயல்கள் குறித்த செல்வாக்கு இந்திய தலைநகர் வரையிலும் உண்டு.மத்திய அரசு துறையில் சமூக செயலுக்காக முற்படுவதற்கு ஏதேனும் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் உடனே தகவல் தெரிவிக்ககோரி மத்திய அரசு உத்தரவிட்டு இவருக்கு அனுமதியும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.ஒகேனக்கல்லில் முதலைப்பண்ணை அருகே தற்போது தள்ளுவண்டி உணவகம் நடத்திவரும் இவரை பற்றி அறிந்த சிலர் இவரிடம் கேள்விகள் கேட்க தொடங்கினர்.நாடு மாற நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இவர் கூறியது.நமக்கெதுக்குடா வம்பு என்னும் பயத்யை தூக்கி எறிந்து அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் இவ்வுலகமே மாறும் என பதிலளித்தார்.இதே போல் ஆங்காங்கே உள்ள குறைகளை அடிக்கடி ஒவ்வொருவரும் சுட்டிக்காட்டினால் வேறெங்கும் அந்த தவறுகள் நடக்காதவாறு நம்மாள் தடுக்க இயலும். மேலும் நாம் யார் என்பதை மக்கள் அறியும் காலம் சென்று மக்களுக்கு முன்னரே கணினி அறியும் காலமாகியுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நம்மில் யார் யாருக்கு எதில் அதிக நாட்டம் உள்ளது என்பதை இணைய தளம் நிர்ணயித்து அதனை பகிர்ந்து வருகின்றன. நீங்கள் யூடியூபில் விரும்பிப் பார்க்கும் அனைத்தும் முகநூல், இன்ஸ்டாகிராம் என சோசியல் மீடியா பகுதிகளில் நாம் கேட்காமலேயே நமக்கு வழங்கப்படும். இது மீன்களுக்கு பொரியை தூவி மேயவிட்டு பிறகு சுற்றி வளைக்கும் தந்திரம் இதை ஒவ்வொருவரும் அறிந்து கொண்டால் நாட்டில் நடக்க இருக்கும் சில குற்றங்கள் தானாகவே குறையும் என கூறியதுடன் என்னுடைய செயல்பாடுகள் மற்றும் சமூக சேவையை பாராட்டி எனக்கு கிடைத்த பரிசு என அனைவரிடமும் ஒரு பிரேம் செய்யப்பட்ட போட்டோவினை காட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவருடைய பிறந்த நாளிற்காக இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து வந்த வாழ்த்து மடல்.பட்டப்படிப்பு முடித்து நல்ல சன்மானம் வாங்கி,பெரும்புள்ளிகளுடன் தொடர்பில் உள்ள எங்களுக்கு கூட வாழ்த்துக்களை கூற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே உள்ளனர். உங்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம் என திகைத்து நின்றனர். அந்த மடலை மின்னஞ்சல் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் அனுப்பி வருபவர் யார் என அறியும் அனைவருக்கும் சில அதிர்ச்சிகள் நிச்சயமாக காத்திருக்கும் அது நம் இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்து மடல். ஆரம்பத்தில் கூறியவாறு நாம் செய்யும் செயலில்தான் நாம் யார் என்பதை நம்மாள் புரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்த்தியது அந்த வாழ்த்து மடல். தற்போது thepolicetv.net என்னும் காவல் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு வெப் சேனலை உருவாக்கி நடத்தி வரும் இவர் இரு வரியில் கூறிய கருத்து "நீ உன்னை மாற்றிக் கொண்டால் உலகம் மாறும்.மக்கள் நலனுக்காக போராடு உலகமே உன்னை தலைவனாக ஏற்கும்" ஜெய்ஹிந்த். எனவே ஒவ்வொருவரும் இதனை மேற்கொண்டால் அனைவருக்குமே அனைத்து இடங்களிலும் பரிசு கிடைக்கும். மக்களுக்கு உதவி செய்ய முற்படுங்கள், ஒற்றுமையை நிலை நிறுத்துங்கள், மற்றவர்க்கு நிகழ்வது நாளை நமக்கு என்பதை மனதில் கொள்ளுங்கள்,தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் நம்மை பற்றிய தகவல்களை பகிர வேண்டாம்,தேவையற்ற லிங்க்-கை திறக்காதீர்,சாலை விதிகளை பின்பற்றுங்கள்,நாம் முதலில் மனிதாபிமத்துடனும் மனிதனாகவும் மாறும் வேலையில் இவ்வுலகமே மாறும் எனவும் கூறினார்.எவ்விடத்திலும் கேள்வி எழுப்பினால் மட்டுமே பதில் கிடைக்கும் என தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.இவரின் கனவு மற்றும் லட்சியம் எங்கும் தன்னால் இயன்ற வரை மற்றவர்க்கு உதவி செய்யவேண்டும் என்பது மட்டுமே. காசு பணம் கொடுக்க பொருளாதார வசதிகள் இல்லை என்றாலும் கஷ்டம் மற்றும் கவலையில் வரும் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow