மதிப்பெண் குறைந்த விரக்தியில் +2 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

May 7, 2024 - 13:00
 0  17
மதிப்பெண் குறைந்த விரக்தியில் +2 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ராமநாதபுரம் ஜெயவேலின் மகள் சௌமியா. இவர் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து தேர்வு எழுதினார். நேற்று முடிவுகள் வெளியான நிலையில் சௌமியா எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்தார். இதனால் மாணவி சௌமியா யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை பூசேரியில் வசித்து வருபவர் சத்யா. இவர் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதிய சத்யா மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சத்யா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மாணவர்களிடையே பெரும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow