வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்; கமிஷனர் நேரில் சென்று ஆய்வு
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19 நிறைவுற்றதை அடுத்து வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் தீவிரமடைந்துள்ளது.இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சென்னையில் உள்ள லயோலா கல்லூரி,அண்ணா பல்கலைகழகம்,ராணி மேரி கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் இன்று நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி.சரத்கர், இணை ஆணையர் தர்மராஜன், துணை கமிஷனர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய், ராமமூர்த்தி உடனிருந்தனர்.
What's Your Reaction?






