கோடை விடுமுறையில் அத்துமீறிய தொழிலாளி;17 வயது சிறுமி கர்ப்பம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் என்கிற சிவா (38), கட்டிட தொழிலாளி இவர், விடுமுறையில் வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை கட்டிட வேலைக்கு அழைத்துச் சென்று நெருக்கமாக பழகியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற சிவா, மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.அதன் பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். இதனால் ஒரு நாள் சிறுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவக்குமார் மீது சிறுமியின் தாய் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிவக்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
What's Your Reaction?