பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் - அமைச்சர்

Sep 10, 2024 - 05:45
 0  4
1 / 1

1.

மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் 11,500 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2,500 கோடி மதிப்பிலான கடன் உதவியையும் வழங்கினார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ. 298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் 40-40 வெற்றி என்பது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்த நற்சான்று. மக்களை தேடிவந்து அரசின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்தாண்டு ரூ. 30,755 கோடி வங்கிக்கடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை ரூ. 14,000 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். மகளிர் சிரமப்படக்கூடாது, குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கே காலை உணவு திட்டம். மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் மதுரையில் மட்டுமே 21 கோடி இலவச பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ள்ளனர்.

மதுரையில் தினந்தோறும் 80,000 பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். மேலும் , 4.62 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow