'சிரஸ்தா' தேர்வை விளம்பரப்படுத்த ஐகோர்ட் உத்தரவு
1.
மதுரை கே. கே. நகரைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் 'சிரஸ்தா' எனும் இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான குடியிருப்புக் கல்விக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தரமான உண்டு, உறைவிட கல்வியை வழங்கும் நோக்கில் 'சிரஸ்தா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 9 வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
சிரஸ்தா' தேர்வு தொடர்பான விபரங்கள் பட்டியலின மக்களுக்கு சரியாக தெரிவதில்லை. எனவே, 'சிரஸ்தா' நுழைவுத் தேர்வு தொடர்பாக பெரியளவில் விளம்பரம் செய்யவும், இலக்கு பகுதியில தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தவும், பொதுமான கால அவகாசம் வழங்கி தேர்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'சிரஸ்தா' நுழைவுத் தேர்வு திட்டங்களை பெருமளவில் விளம்பரப்படுத்தினால் தான், பட்டியல் இன மாணவர்கள் சேர்ந்தவர்கள் பயன் பெற இயலும். தற்போது இணையதள பயன்பாடு மிகவும் எளிதாகி விட்ட சூழலில், அந்த வசதியை மாணவர்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். 'சிரஸ்தா' தேர்வு குறித்து பெருமளவில் விளம்பரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
What's Your Reaction?