கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முருகன் கோவில் அருகே இன்று (அக். 4) காலை உசிலம்பட்டி கட்டிட பொறியாளர் கூட்டமைப்பு , தமிழ் மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்கம், மற்றும் உசிலம்பட்டி கோட்டம் அளவிலான லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எம். சாண்ட், ஜல்லி வகைகள், மற்றும் கட்டுமான பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
What's Your Reaction?