சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?...
சோழவந்தானில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தாமாக முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி கடும் சிரமத்தை அனுபவித்து வந்தனர், மேலும் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு காலம் ஆகவுள்ள நிலையில் பெரும்பாலான தனியார் பேருந்துகளும் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து நிலையம் வந்து செல்வதில்லை.
இது தொடர்பாக பலர் கோரிக்கை விடுத்தும், பத்திரிக்கைகளில் தொடர் செய்திகளும் வந்து பிரச்சினை பெரிதாகிய நிலையில்.இன்று (செப்.,26) சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது.
இதனையடுத்து சோழவந்தான் ஆக்கிரமிப்பாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையை அணுகியதில் ஏற்கனவே கெடு முடிந்து 14 மாதம் கடந்துவிட்டதால் வாய்ப்பில்லை எனக் கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து காமராஜர் ஸ்கூல், மாரியம்மன் கோவில் மற்றும் பேட்டை பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் பலர் சேதாரத்தை தவிர்க்க தாங்களாக முன்வந்து அகற்றி வருகின்றனர்.
What's Your Reaction?