கோவிலில் உண்டியலில் பணம் திருட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அம்பட்டையாம்பட்டியில் தென்கரை முத்தையா, முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலின் பூசாரிகளாக மதுரை செல்லுார் முன்னாள் ராணுவ வீரர் ராமகிருஷ்ணன் உள்ளார். கோயிலில் கட்டட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. நேற்று(செப்.25) காலை ராமகிருஷ்ணன் கோயிலுக்கு வநதபோது, கோயிலுக்குள் சுவர் ஏறி உள்ளே வந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு, இரும்பு பெட்டி மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன் இரவு இதேபோல் பெரிய வாகைக்குளம் தென்கரை முத்தையா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?