ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்; குவிந்த போலீசார்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாலையோரத்தில் கடைக்காரர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பொது மக்களின் கோரிக்கையின் பேரில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ராதா முத்துக்குமாரி, கௌதம் ஆகியோர் முன்னிலையில் இன்று (செப்.,26) ஜேசிபி மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன.
ஆகிரமிப்பு பணியின் போது வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் கௌதமன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார் துப்புரவு ஆய்வாளர் சூர்ய குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?