சிறப்பு மருத்துவ முகாமில் பயன் பெற்ற கிராம மக்கள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கேசம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று (செப்.,21) தமிழக அரசின் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகப்பெருமாள் அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதிலெட்சுமி ராஜா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்கள்.
ஊராட்சி மன்ற உபதலைவர் உமா சின்னடைக்கன், செயலாளர் சேகர் மற்றும் வார்டு கவுன்சிலர் நாச்சம்மாள் சின்னடைக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் பங்கேற்ற பொதுமக்களுககு இ. சி. ஜி, ஸ்கேன், கண் மருத்துவம், தோல் நோய், சக்கரை நோய்க்கான நீர், இரத்தப் பரிசோதனை மற்றும் காசநோய் கண்டறிதலுக்கான (Digital x-ray) படம் எடுத்தல் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் 986 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
What's Your Reaction?