சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தாமாக முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
மதுரை சோழவந்தானில் 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி கடும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகவுள்ள நிலையில் பெரும்பாலான தனியார் பேருந்துகளும் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து நிலையம் வந்து செல்வதில்லை.
இது குறித்து பலர் கோரிக்கை விடுத்தும், பிரச்சினை பெரிதாகிய நிலையில் செப்டம்பர் 26 அன்று சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
சோழவந்தான் ஆக்கிரமிப்பாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையை அணுகியதில் ஏற்கனவே கெடு முடிந்து 14 மாதம் கடந்துவிட்டதால் வாய்ப்பில்லை எனக் கூறியதாக தெரிகிறது. ஆக்கிரமிப்பாளர்களோ, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நெடுஞ்சாலைத்துறை மக்கள் பக்கமா? ஆக்கிரமிப்பாளர்கள் பக்கமா என நாளை தெரிந்து விடும்.
What's Your Reaction?