மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்.

Aug 28, 2024 - 07:14
 0  3
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நேற்று இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக் கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. 

உண்டியல் திறப்பின்போது திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை, இந்து சமய அறநிலையத்துறை. உதவி ஆணையர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ. 103, 40, 071/- (ரூபாய் ஒரு கோடியே மூன்று இலட்சத்து நாற்பதாயிரத்து எழுபத்து ஒன்று மட்டும்), பலமாற்று பொன் இனங்கள் 432 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 1398 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 401 ஆகியன வரப்பெற்றுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow