போலி பட்டா தயாரித்தவர் அதிரடி கைது
மேலூர் அருகே பஞ்சமி நிலங்களுக்கு போலி பட்டா தயாரித்தவர் இன்று (செப்.,22) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை திருவாதவூர் விஏஓ மந்த காளை மேலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பஞ்சமி நிலங்களுக்கு போலி பட்டா வழங்கி பொது மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்ததாகவும், அந்த போலி பட்டாவில், மாவட்ட ஆட்சியரின் கோபுரம் மற்றும் தனி தாசில்தாரின் கையெழுத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது திருவாதவூர் காலனி ராஜேந்திரன் மகன் ஆனந்த் (36) என தெரிய வந்தது. அவரை இன்று (செப்.,22) காலை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?