மேலூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வஞ்சிநகரம் ஊராட்சி வ. தேத்தாம்பட்டி, மணப்பட்டி பன்னீர்ராஜா மாடுபிடி குழு வ. தேத்தாம்பட்டி இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் நடத்தும் 5ம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி மணியாரம் கண்மாயில் நேற்று(செப்.23) நடைபெற்றது. இதில், 15 அணியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 15 காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசு தொகையும், வெள்ளிகாசு, அண்டா, குத்து விளக்கு, தென்னங்கன்று போன்ற பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர்.
இந்தப் போட்டியை காண சுற்றுப்புற கிராமங்களான தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, வஞ்சிநகரம், கருங்காலகுடி, கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி, நத்தம், துவரங்குறிச்சி, ஆகிய பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் வட மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு களித்தனர். நிகழ்ச்சியை விழா கமிட்டி வ. தேத்தாம்பட்டி, கிராமபொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மணப்பட்டி பன்னீர்ராஜா குழு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
What's Your Reaction?