காந்தி குறித்து அவதூறு கருத்து ;நூதன நிபந்தனையுடன் ஜாமீன்
பாரதிய பிரஜா ஐக்கிய கட்சியின் மாநில செயலாளர் வேல்முருகன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், கல்யாண சுந்தரம் என்ற பெயரில் முகநூலில் மகாத்மா காந்தியை பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டும், காந்தியின் புகைப்படத்தை தவறாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் கல்யாணசுந்தரம் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கல்யாணசுந்தரம், மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதாவது மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில், நூலகருக்கு உதவியாக வேலை செய்து புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். சம்ந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் சரண்டராக வேண்டும், மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தினமும் காலை 9 மணிக்கு தொடர்ந்து 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?