மது கடையை திறக்க எதிர்ப்பு; கிராமசபையில் தீர்மானம்

Oct 3, 2024 - 06:25
 0  0
மது கடையை திறக்க எதிர்ப்பு; கிராமசபையில் தீர்மானம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி கோவில்பட்டியில் இன்று (அக்.,2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரியானா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளை தங்கள் ஊராட்சி எல்லைக்குள் அமைக்க அனுமதிக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யும் அதிகாரத்தை அந்தந்த கிராம ஊராட்சிக்கும் கிராம சபைக்கும் வழங்கும்படியான ஊராட்சி சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என கிராம சபையில் ஒருமனதாக தீர்மான நிறைவேற்றப்பட்டது.

மேலும் கிராமசபையில் பேருந்துவசதி, நத்தம் புறம்போக்கிற்கு புதிய பட்டா வழங்குவது, 100நாள் திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் பேசப்பட்டன. கம்பூர் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு செய்யப்பட்ட வரவுசெலவு அறிக்கையும் கிராமசபையில் வாசிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கணேசன் பார்வையாளராக கலந்து கொண்டார். பள்ளிஆசிரியர்கள், நியாயவிலைக்கடை , சுகாதாரத்துறை, அங்கன்வாடி, மகளிர் திட்டம்பணியாளர்கள் , காவல்துறை, உளவுத்துறையினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow