கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றை மூட முயற்சி
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல ஆண்டுகளுக்கு முன் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்ட குடிநீர் கிணறு காணாமல் போனதால் பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகள் மற்றும் புகார்கள் எழுந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் காணாமல் போன கிணறு மீட்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த கிணறை முழுவதுமாக மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நீண்ட காலமாக மாரியம்மன் கோவில் சன்னதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் அகற்றப்பட்டது. மாரியம்மன் சன்னதியில் தண்ணீர் வசதி இல்லாததால் முழுவதுமாக மூடாமல் பழங்காலப் பெருமை கொண்ட அந்த கிணற்றினை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிணறு அருகில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
What's Your Reaction?