அழகர் கோயில்: மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்த ...
மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருகே சுந்தர்ராஜன்பட்டியில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (அக். 6) காலை வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நேருபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மொத்தம் ரூ. 4. 5 லட்சம் பரிசு தொகையாக வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாட்டு வண்டி பந்தயத்தை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.
What's Your Reaction?