மதுரையில் தேசிய நெடுஞ்சாலை பைக் வீலிங்!
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரை மற்றும் பறக்கும் பாலம் பகுதியில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்தது. அதனை தடுக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பாக 24 மணி நேரமும் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் சம்பவங்கள் என்பது மாநகர் பகுதியில் குறைந்துள்ளது.
போலீசுக்கு பயந்து தற்போது பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்யும் இளைஞர்கள் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை வேளாண் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸ் ஈடுபடும் சம்பவங்களும் பைக் வீலிங் செய்து அதனை ரீல்ஸ் ஆக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. தற்போது இளைஞர் ஒருவர் சினிமா பாடலுக்கு பைக் வீலிங் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாக பரவி வருகிறது.
What's Your Reaction?