ஒத்தக்கடையில் குவியும் குப்பைகள்!
மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நெடுஞ்சாலை ஓரங்களில் சட்ட விரோதமாக குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உரிய முறையில் குப்பைகளை அகற்ற ஏற்பாடுகள் இல்லாத நிலையில், குப்பைகளை நெடுஞ்சாலைகளில் கொட்டும் அவல நிலை நீடித்து வருகிறது.
ஒத்தக்கடை ஊராட்சி மன்ற வாகனத்தில் இன்று ஊராட்சியிகளின் குப்பைகளை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் வீடியோ இன்று (செப்.16) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குவித்துவைக்கப்பட்டுள்ள குப்பைகளை எரிப்பதால் சாலையோரம் முழுவதும் புகைமூட்டம் விண்ணை முட்டும் வகையில் மேல் எழும்பி வருகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?