மதுரை: 24 மணி நேர விமான நிலைய செயல்பாடு தொடக்க விழா
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர செயல்பாடு துவக்க விழா நேற்று (அக். 1) இரவு நடைபெற்றது. மதுரை விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் விருதுநகர் எம். பி. மாணிக்கம் தாகூர், இணைத்தலைவரும் மதுரை எம். பி சு. வெங்கடேசன், விமான நிலைய ஆலோசனை குழுவின் துணை தலைவருமான திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் சுரேஷ், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், மற்றும் பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் சுரேஷ் பேட்டியில் கூறியதாவது. மதுரை விமான நிலையத்தில் இன்று ஒரு பொன்னான நாள். 24 மணி நேர சேவை மதுரைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நிறுவனங்களிடம் பேசப்பட்டு சேவைக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வணிக நிர்வாகம் பெருகும். தென் மாவட்டங்களில் மதுரை விமான நிலையம் ஒரு பெரிய தூணாக இருக்கும். இனிமேல் தான் விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை செய்ய உள்ளோம். விமான நிலைய கார்கோ இன்னும் வளர்வதற்கு மிகவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மதுரை மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியடையும். விமான நிலைய உள் கட்டமைப்பு விரிவாக்க பணிகள் ஓராண்டுக்குள் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.
What's Your Reaction?