கிராம சபையில் தீர்மானம் நோட்டு இல்லாமல் நடந்தேறிய கிராம சபை

Oct 3, 2024 - 14:18
 0  103

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கச்சை கட்டி பகுதியில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை நடைபெற்றது அதில் மக்கள் அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் மற்றும் கழிவு நீர் வெளியேறாமல் இருப்பது மற்றும் தூய்மை பணியாளர்கள் முறையாக வராமல் இருப்பதை குறித்து மக்கள் ஆவேசத்துடன் கேள்வி கேள்வி எழுப்பினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் பராமரிக்கப்படும் 37 ஆவணங்கள் மக்கள் கிராம சபையில் வைக்க வேண்டும் என்பது விதி ஆனால் இங்கே தீர்மானம் நோட்டு கூட கொண்டு வராமல் இந்த கிராம சபையை நடைபெற்றதாகவும் மற்றும் மக்கள் மனுக்கள் கொடுத்தால் தீர்மான நகல் கேட்டால் தீர்மான நகல் கிடையாது என்று வாதத்தை முன்வைத்து கடைசிவரை தீர்மானம் நகல் கொடுக்கப்படவில்லை மக்களும்,சமூக ஆர்வலர் ஞானசேகரன் கூறினார்.

 

கச்சை கட்டியின் பிரதான கோரிக்கையான கல்குவாரி ஏற்படும் பாதிப்புகளை குறித்து மனுக்களாக எழுதி இப்பகுதி பொதுமக்களும் தெருக்கல் வாரியாக இந்த குவாரியில் இருந்து அதிகமான மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சைனஸ், அலர்ஜி, ஒவ்வாமை மற்றும் கல்லடைப்பு, கிட்னி பாதிப்பு, நரம்பு சுருளும் வியாதிகள் பாதிப்பு உருவாகும் காரணத்தால் இந்த கல்குவாரி வேண்டாம் என்று மக்கள் ஒருமனதாக தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கையை கிராம நிர்வாகம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow