மதுரை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அவனியாபுரம் பெரியார் நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் அனுஷ்குமார் (19). தனியார் கல்லூரியில் கலை அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் ஆன்லைனில் பிரீ பையர் கேம் விளையாடி வந்தார். இதற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப் பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
சற்று குணமடைந்த நிலையில் நேற்று முன்தினம் (அக். 4) கல்லூரிக்கு சென்று மாலை வீடு திரும்பினார். வீட்டில் பாத்ரூமிற்குள் சென்றவர் வெளியே வரவில்லை. பெற்றோர் சென்று பார்த்த போது தூக்குப்போட்டு அங்கு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பாலமுருகன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
What's Your Reaction?