திருநகர்: மக்கள் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் இயந்திரம்
மதுரை மாவட்டம் விளாச்சேரி வடக்கு முஸ்லிம் தெருவில் பொதுமக்களின் வசதிக்காக திருப்பரங்குன்றம் ஒன்றிய நிதியிலிருந்து பல லட்சம் செலவில் ஒன்றரை ஆண்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது. அன்று முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டிற்கு வரவில்லை. அக்கட்டடம் பூட்டியே கிடக்கிறது.
ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் பொது மக்கள் கோரிக்கை வைத்தாலும் சுத்திகரிப்பு மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு மனது வரவில்லை. இதனால் பல லட்சம் மக்கள் பணம்தான் வீணாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் அந்த இயந்திரத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, சுத்திகரிப்பு மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?