புதிய நாடக மேடையை திறந்து வைத்த எம். பி.

Sep 18, 2024 - 06:41
 0  2
புதிய நாடக மேடையை திறந்து வைத்த எம். பி.

மதுரை அருகே வேடர் புளியங்குளத்தில் புதிய பேருந்து பயணிகள் நிழல்குடை திறப்பு விழா மற்றும் தென்பழஞ்சி பகுதியில் நாடக மேடை திறப்பு விழா நேற்று (செப்16)நடைபெற்றது.

இதில் விருதுநகர் எம். பி. மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், மதுரை விமானநிலையம் 24 மணி நேர சேவை குறித்த கேள்விக்கு,

மத்திய அமைச்சர் ராம் நாயுடுவை நாடாளுமன்ற அவையின் போது தென் தமிழக எம்.பிகள் 4 பேருடன் சென்று சந்தித்தோம். நாங்கள் வைத்த மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகளில் இது முதல் கோரிக்கை. மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர சேவையாக்குவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதை அவர்கள் அறிவித்ததற்கு பிறகு இந்த 24 மணி நேர சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

இதற்கு முன்பு மதுரை விமான நிலைய இயக்குனராக இருந்த சுரேஷ் தற்போது இந்திய விமானத்துறை ஆணைய பொறுப்புத் தலைவராக பதவியேற்றுள்ளார். அவரிடமும் பேசியிருந்தோம். அவர் முயற்சியால் முதல் படியை தாண்டி உள்ளோம். சர்வதேச விமான நிலையம் மற்றும் ஓடுதள பாதை விரிவாக்கம் போன்ற வேலைகளும் அடுத்தடுத்து நடக்கும் என நினைக்கிறேன். விமான நிலைய நிறுவனங்கள் அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேர சேவையை பயன்படுத்த விமானத்துறை தயாராகி உள்ளது என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow