அரசஞ்சண்முகனாரின் பிறந்த நாள் விழா

Sep 18, 2024 - 06:40
 0  2
அரசஞ்சண்முகனாரின் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ் பெரும் புலவர் அரசஞ்சண்முகனாரின் 156 வது பிறந்தநாள் விழா அவரது வழித் தோன்றல்களான செண்பகம் பிள்ளை, முத்துப்பிள்ளை பங்காளிகள் அறக்கட்டளை சார்பாக சிறப்பாக நடைபெற்றது. இதற்கு அறக்கட்டளை தலைவர் முருகேசன் வகித்தார். உறவின் முறை நிர்வாகிகள் தங்கராஜ் , இராஜகுமாரன், குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் கண்ணன், கதிரேசன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி கார்த்திகேயன் வரவேற்றார். 

இதையடுத்து, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் தலைவர்கள் முருகேசன், அய்யப்பன், பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், அருணாசலம், ரேகா ராமச்சந்திரன், ஆசிரியர்கள் சண்முகவேல், முருகேசன், பேராசிரியர் முத்தையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் 10 , 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow