முதல்வரின் பயணம் தோல்வி பயணம்; அன்புமணி ராமதாஸ்
மதுரையில் பாமக சார்பில் நடைபெறும் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில், தமிழக முதல்வர் 17 நாள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து 19 நிறுவனங்களில் மூலம் 7600 கோடிமுதலீட்டிற்கான கையெழுத்திட்டு இருக்கிறார். இது ஒரு தோல்வி பயணம், மற்ற மாநில முதல்வர்கள் ஐந்து நாட்கள் ஆறு நாட்களில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அந்நிய முதலீடுகளுக்காக 30000 கோடி 40, 000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கிறார்கள்.
தமிழகத்தில் அனைத்து விதமான போதைப் பொருள்களும் கிடைக்கிறது. கூலிப் என்ற போதை பொருளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அதை ஏன் அரசு தடை செய்யக்கூடாது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
மதுவை ஒழிப்பேன் என கூறும் திருமாவளவன் மது உற்பத்தி செய்யும் அலைகளை வைத்துள்ள டி ஆர் பாலு, ஜெகத்ரட்சகனுக்கு பிரச்சாரம் செய்வது ஏன் திருமாவளவன் மது ஒழிக்கணும் என கூறுகிறார்கள். மது ஆலை வைத்த டி ஆர் பாலுக்கு எதற்கு நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள். டி ஆர் பாலுவின் மது ஆலையில் இருந்து டாஸ்மார்க் 20% ஜெகத்ரட்சகனின் மது ஆலையில் இருந்து 20 சதவீதம் என மொத்தம் 40 சதவீதம் மதுக்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.
What's Your Reaction?