பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய குரங்கு; அப்புறப்படுத்த கோரி பொது மக்கள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் முடிகண்டநல்லூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் விஜய சங்கீதன்- வினோதினி.இவர்களுக்கு 2வதாக பெண்குழந்தை பிறந்து 25 நாட்கள் மட்டுமே ஆகிறது. தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு குடும்பத்தினர், வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். சரியாக அந்த சமயத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த மிகப்பெரிய குரங்கு ஒன்று வீட்டுக்குள் புகுந்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.இதில் குழந்தையின் இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. வலியில் குழந்தை அலறித் துடித்த சத்தம்கேட்டு பெற்றோர் ஓடிவந்தனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினர். அங்கு குழந்தைக்கு 14 தையல்கள் போடப்பட்டுள்ளது.இந்த குரங்கு தொடர்ந்து ஊரில் பல பேரை கடித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் விரைந்து குரங்கினை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?