ஏ.டி. எம்-மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து நூதன திருட்டு

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்கள் ஏ.டி.எம். கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வரவே அதிரடி விசாரணை நடத்தினர்.அப்போது திண்டுக்கல் மாவட்டம் மடூர், புகையிலைப்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 29) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
What's Your Reaction?






