குடியாத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் சீண்டல்
குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமணமான 28 வயது வாலிபர் ஒருவர், மாணவியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?