கன்னியாகுமரியில் நரிக்குறவர் 7 வயது சிறுமி கடத்தல்;வாலிபருக்கு போலீஸ் வலை
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஊசிமணி. பாசிமணி விற்பனை செய்யும் நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. ஆந்திர மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி கன்னியாகுமரி வந்த இவர் பல ஆண்டுகளாக பல வகையான மணிகளை விற்பனை செய்து குடும்பத்தை காத்து வருகிறார்.இவரது 7 வயது குழந்தை சங்கீதா திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த இவர் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் சிறுமியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டு குற்றவாளியையும், கடத்தப்பட்ட சிறுமியையும் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?