திருப்பரங்குன்றத்தில் 36 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Sep 14, 2024 - 05:48
 0  2
திருப்பரங்குன்றத்தில் 36 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று (செப்.,12) மாலை 36 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்று செவந்தி குளம் கண்மாயில் கரைக்கபட்டது. விழாவிற்கு இந்து முன்னணி நகர தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரசாந்த், கோட்ட செயலாளர் அரச பாண்டி, மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விநாயகர் விஜர்சன ஊர்வலத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் துணை ஆணையர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் விநாயகர் விஜர்சன ஊர்வலம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம்,பெரிய ரத வீதி பள்ளிவாசல் வழியாக வரும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் கீழ ரத வீதி மேலரத வீதி வழியாக கிரிவலப்பாதை சென்று சிவந்தி குளம் கண்மாயில் கரைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow