நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி

Sep 14, 2024 - 05:46
 0  2
நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி

மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதனால் வாகன ஓட்டிகள் தினமும் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்டு சில வாகன ஓட்டிகளின் உயிர் பிரிவதும், சிலருக்கு கை கால்கள் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் மாநகராட்சியின் சார்பாக பிடித்து கால்நடை காப்பகங்களில் அடைக்க தமிழ்நாடு அரசின் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மதுரை திருநகரில் சாலைகளில் 7 க்கும் மேற்பட்ட சினை மாடுகள் அதிகமாக சுற்றி திரிவதாகவும் இதனால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. 

இதையடுத்து இன்று (செப்.,13) மதுரை மாநகராட்சியின் சார்பாக மாடுகளை பிடிக்க வந்தனர். அப்போது மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்க கூடாது என்று திருநகரைப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்தையா, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனம் முன்பு உருண்டு மாடுகளை பிடிக்கக் கூடாது என்று உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow