பத்தாம் வகுப்பு மாணவி மாயம்; தவிக்கும் தாய்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே டி. வலையங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த சேர்ந்த கருப்பையா என்பவரின் 15 வயது மகள் அருகே உள்ள வீரபெருமாள்புரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் (செப்.,11) பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (செப்.,12) இது குறித்து அவரது தாயார் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றார்கள்.
What's Your Reaction?