பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்; காவல் ஆணையா்

Sep 23, 2024 - 05:45
 0  2
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்; காவல் ஆணையா்

மதுவிலக்கு குற்றங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்டம்பர் 27ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மதுரை மாநகா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கப்பட்ட 28 வாகனங்கள், செப்டம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது.

அரசுடமையாக்கப்பட்ட வாகனங்கள் மதுரை மாநகா், மதுவிலக்குப் பிரிவு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே, வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள் மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு முன்பணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ. 5000, மூன்று, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 10, 000 மதுரை மாநகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் செப். 24, 25 ஆகிய இரு நாள்கள் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதீப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow