திட்டக்குடி பாலத்தில் இருந்து இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
திட்டக்குடி அடுத்த வி.சித்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கண்ணன் (28). நேற்று இவர் குடிபோதையில் தொழுதூரில் உள்ள மோகினி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?