கடலூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் மீது பாலியல் வழக்கு
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவிக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது என்ஜினியரிங் மாணவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் கடலூர் வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?