மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் தொடரும் மின்தடை
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 15 வது வார்டில் உள்ள திருவள்ளுவர் தெருவில் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடி படர்ந்து மின் கம்பமே தெரியாத அளவிற்கு மாறி உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து 15 வது வார்டு கவுன்சிலர் ரிம்யா செந்தில் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார். இருப்பினும் பயன் ஏதும் ஏற்படவில்லை. மாதந் தோறும் மின்தடை ஏற்படுத்தி பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களுக்கு இதனை மட்டும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. உடனடியாக மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை நீக்கி தடையில்லா மின்சாரம் கிடைக்க மின்வாரியம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?