குத்தகை காலம் முடிந்தும் செயல்படும் கல்குவாரிகள் ஆட்சியரிடம் கிராமத்தினர் புகார்
1.
மதுரை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் குத்தகை காலம் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் செயல்படும் கல்குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கச்சைகட்டி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அக்கிரா மத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மற்றும் விவசாயிகள் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கச்சைகட்டி
அருகே ராமையன்பட்டியில் தனியார் சிலருக்கு விடப்பட்ட கல்குவாரி குத்தகை காலம் முடிந்து 3 மாதங்களுக்கு மேலா கிறது.
அரசு விதிகளை மீறிதற்போது வரை கனிமவளங்களை சட்ட விரோதமாக வெட்டி கடத்துகின்றனர். இதனால், அடிக்கடி செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. தூசியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
அரசு விதிகளை மீறி பல லட்சம் கனஅடி கற்கள் வெட்டி எடுத்துச் செல்வதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், கச்சைகட்டியில் விளைநிலங்கள், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள நிலத்தில் புதிதாக கல் குவாரி அமைக்கும் முடிவையும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என, அதில் வலி யுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?