பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 - ராஜன் செல்லப்பா பேச்சு
மதுரை சிந்தாமணியில் உள்ள காளியம்மன் கோயில் திடலில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா நேற்று(செப்.22) கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு வழக்கறிஞர் செல்வம் தலைமை வைத்தார். விழாவில் பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதாவது,
அதிமுகவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் களத்தில் பெரிய அளவில் இருந்த அட்டை தற்போது பேங்க் ஏடிஎம் கார்டு போன்று உள்ளது. இதை ஒவ்வொரு பகுதியிலும் வழங்கும்போது அப்பகுதி மக்கள் பேங்க் ஏடிஎம் கார்டு மாதிரி உள்ளது. இதில் எதுவும் பணம் வருமா என கேட்டனர்.
கண்டிப்பாக வரும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் பெண்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் அம்மா உணவகம் போன்ற அனைத்து வசதிகளும் திரும்ப கிடைக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என 2026 தேர்தல் வரும் முன்னேயே தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய ராஜன் செல்லப்பா, திமுக அரசு மதுரைக்கு எந்தவித திட்டங்களும் கொண்டு வரவில்லை, செயல்படுத்தவில்லை. கலைஞர் நூலகத்தை தவிர வேறு எதுவும் உருப்படியான திட்டம் இல்லை. அங்கும் மக்கள் செல்வதில்லை. வடபழஞ்சியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவிற்கு மட்டும் ரூ. 50 கோடி கொடுத்துள்ளார் என்றார்.
What's Your Reaction?