புதிய ரூ.5000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மத்திய வங்கி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பாலிமர் பிளாஸ்டிக் கரன்சி நோட்டு இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. டிசம்பரில் ரூ.10, 50, 100, 500, 1000 மற்றும் 5000 ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் ஸ்டேட் பேங் கவர்னர் அகமது கூறியுள்ளார். தற்போது 40 நாடுகள் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்துகின்றன. இவை கடினமானது, ஹாலோகிராம்கள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
What's Your Reaction?