சோழவந்தான் அருகே கோவில்களுக்கு மகா...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவலம்புரிவிநாயகர், ஸ்ரீசப்பானிகருப்பர், ஸ்ரீதொட்டிச்சிஅம்மன் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று (செப்.,11) நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, திருவேடகம் கணேச பட்டர் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன் முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் பங்காளிகள் உறவின் முறையாளர்கள் சோழவந்தான் காட்டுநாயக்கன் சமூகத்தார் ஆகியோர் மகா கும்பாபிஷே விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். விழா கமிட்டி சார்பாக கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
.
What's Your Reaction?