கம்பூரில் சமூக தணிக்கை கூட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (செப் 21) நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சியில் கிராம மந்தை அருகில் ஊராட்சி மன்றத் தலைவர் கதிரேசன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சமூக தணிக்கை மற்றும் பிரதம மந்திரி வீடு திட்டம் தணிக்கை சம்பந்தமான தணிக்கை நடைபெற்றது. கிராம மக்கள் தங்கள் சந்தேகங்களை ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தூணை தலைவர் நிலா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?