இரவில் இருளில் மூழ்கிய மதுரை மாநகர சாலைகள்
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் ஏராளமான தெரு விளக்குகள் செயல்படாமல் உள்ளது.
மதுரையின் பிரதான பேருந்து நிலையமான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் வழியில் பழ மார்க்கெட் தொடங்கி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரையிலான தெருவிளக்குகள் முழுவதுமாக செயல்படாத நிலையில் அந்த சாலை முழுவதிலும் இருளில் மூழ்கிக் காணப்பட்டது.
இதே போன்று மாவட்ட ஆட்சியர் இல்லம் அமைந்திருக்கக்கூடிய நத்தம் பறக்கும் பாலம் ரிசர்வ் லைன் சாலை முழுவதிலும் பாலத்தில் அமைக்கப்பட்ட விளக்குகள் செயல்படாத நிலையில் நத்தம் சாலை முழுவதிலும் இருளில் மூழ்கிக் காணப்பட்டது.
நத்தம் பறக்கும் மேம்பாலம் கீழ் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் ரிசர்வ் லைன் முதல் ஆத்திகுளம் வரை இருள் சூழ்ந்து காணப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
What's Your Reaction?