ஸ்டுடியோவின் ஷட்டர் உடைக்கப்பட்டு கேமரா திருட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள மேலக்கோட்டை பாரதி நகரில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் மாடியில் சி எஸ் போட்டோகிராபி என்ற பெயரில் போட்டோ ஸ்டுடியோ உள்ளது. இந்த ஸ்டுடியோ உரிமையாளர் ஜெயக்குமார் (27) என்பவர் நேற்று முன்தினம் (அக். 1) வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு நேற்று (அக். 2) காலை வந்து பார்த்த போது மாடிக்கு செல்லக்கூடிய கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்ட ஜெயக்குமார் சந்தேகத்துடன் மேலே சென்று பார்த்தபோது ஸ்டுடியோவின் ஷட்டர் உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த இரண்டு புகைப்பட கேமராக்கள் மற்றும் கல்லாவில் இருந்த ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு போனது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் திருமங்கலம் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டுடியோவில் கொள்ளையடிக்க ப்பட்ட கேமராக்களின் மதிப்பு 4 லட்ச ரூபாய் வரைஇருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்து அப்பகுதியில் காட்சிகளையும் சிசிடிவி ஆய்வு செய்து வருகின்றனர்.
What's Your Reaction?