கடன் வாங்கி மாயமான மனைவி; கணவர் புகார்
உசிலம்பட்டி அருகே மனைவி மாயம் என கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி காலனியை சேர்ந்த சின்னணன் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி (37) என்பவர் மகளிர் மன்ற சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றிருந்தார். இதனை கணவர் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி காலை 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை என்பதால் நேற்று அக்.2) கணவர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?