தனியார் நிதிநிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி; 3 பேர் கைது

Apr 18, 2024 - 12:31
 0  7
தனியார் நிதிநிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி; 3 பேர் கைது

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் பூராசாமி மகன்

ஜெகன்நாதன் (வயது 46). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் சிட்பண்ட் ஒன்றில்

வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் ஆனதாண்டவபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வசூலுக்காக சென்றுள்ளார். செல்லும் வழியில் அவரின் வாகனம் பஞ்சர் ஆனதால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டு அவருடன் மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளார்.கழுக்கானிமுட்டம் அருகே சென்ற போது மர்மநபர்கள் 2 பேர் இருசக்கரவாகனத்தை வழி மறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து லிப்ட் கொடுத்த இருசக்கர வாகன ஓட்டுநர், மற்றும் மர்ம நபர்கள் சேர்ந்து ஜெகநாதனை அடித்து தாக்கியதோடு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு ஜெகன்நாதனை விரட்டி அடித்துள்ளனர்.இதனையடுத்து ஜெகன்நாதனின் நண்பர்கள் மற்றும் கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த சிலரின் உதவியுடன், வழிபறி செய்தவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் தப்பிவிட்டனர். அவர்கள் லிப்ட் கொடுத்த நபரை பிடித்து, அடித்து மரத்தில் கட்டி வைத்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வழிபறியில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் கழனிவாசல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் வரதராஜன் (18), மயிலாடுதுறை கழுக்காணிமுட்டம் ஈவேரா தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் சுபாஷ் (18), மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய மூவரும் இந்த வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜன், சுபாஷ் மற்றும் சிறுவன் ஆகிய மூவரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் வரதராஜன், சுபாஷ் ஆகிய இருவரையும் மயிலாடுதுறை சப்- ஜெயிலில் அடைத்தனர். மேலும் சிறுவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow