அனுமதியின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல்; மாவட்ட...
மதுரை மாநகர் கட்ராபாளையம் பகுதியில் உள்ள மகளிர் தங்கு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்ராபாளையம் பகுதியில் விபத்து நடந்த பெண்கள் தங்கு விடுதியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதே போன்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டு மேலமார்ட் வீதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களை சந்தித்து அங்கு நடைபெறும் மருத்துவ பரிசோதனை முகாமை பார்வையிட்டு அங்கிருந்த பெண்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் உயிரிழந்தவர்களின் உடலை பார்த்து அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆறுதல் தெரிவித்தார்.இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சிகளில் முறையான அனுமதியின்றி செயல்படும் விடுதிகளை கண்டறிந்து இந்த வாரத்திற்குள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
What's Your Reaction?